Friday, July 15, 2011

தங்கை இவள்

சின்னஞ் சிறு வயது முதல்
நான் அறிந்த தேவதை இவள்!
என்னோடே வளர்ந்து வந்த
சித்திரம் இவள்!
தங்கை இவள்
எனக்கென்று பதறுகையில்
தாயும் இவள்!
அப்பாவிடம் சொல்லி
என் திருட்டு உணர்த்திய
இவள் தானே
பிறிதொரு நாளில்
மாடு முட்ட வர
என் பின்னால் ஒளிந்து
நான் ஆளானதையும் உணர்த்தியவள்!
முழித்து விடுவாளோ என்றே 
மூச்சடக்கி பார்த்திருந்தது எத்தனை காலம்.
ஆக்கி தின்னக் கூட்டாஞ்சோறு -
இன்று நினைத்தாலும்
சிறுபிள்ளைத்தனமாய் தோன்றவில்லை.
இவள்  தத்தி தத்தி தமிழ் பேசிய
நடை பழகிய நாட்கள்
என் நினைவில்.
நெஞ்செல்லாம்
இவள் அள்ளித் தந்த புன்னகையே

5 comments:

  1. நல்ல கவிதைகள் நிறைந்த வலைப்பூ... Ranjith www.ranjithpoems.blogspot.com

    ReplyDelete
  2. anna antha sister kavithaya parkum pothu ne enkuda born panna anna va iruka kudatho nu iruku

    ReplyDelete