Saturday, July 9, 2011

தயக்கம்

அனுப்பிச்ச ரூவா கிடைச்சிடுச்சா பா?
………..
அங்க ரொம்ப குளிராமே?
இன்னொரு போர்வை வாங்கிக்கய்யா
என்ற தாயிடம்
எப்படிச் சொல்வேன்?
விடுதிக் கட்டணத்திற்கே
இன்னும் நூறு ரூவா தேவை என்று!

1 comment:

  1. மிக நன்றாக வந்துள்ளது.
    படைத்தவனின் உணர்வு படித்தவனையும் அடைகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete