நெருங்கி வந்து சிணுங்குகிறாள்
பற்றி எரிகிறேன் நான்!
சற்றே விலகி முறைக்கிறாள்
உருகுகிறேன் நான்!
இப்படியெல்லாமா விளையாடுவது?
அவளை பாட்டுப் பொருளாய் வைத்திருக்கிறேன் நான்
என்னை விளையாட்டுப் பொருளாய் வைத்திருக்கிறாள் அவள்!
குளிர் சாதனக் காற்றுக்கு பழக்கப்படாத / மின்விசிறி இன்றி வாழத் தெரியாத / சிகப்பழகு கிரீம்களில் அழகைத் தேடாத / சராசரி மதுரை வாழ் தமிழன் நான் / விடிந்து விடும் என்கிற நம்பிக்கையில் கிழக்கு பார்த்திருக்கும் / சராசரி தமிழன் நான்
No comments:
Post a Comment