Wednesday, July 6, 2011

கவிதை தான் நீ!

கவிதை எழுதலாம், கவிதையே தன்னை பற்றி கவிதை எழுத சொன்னால் என்ன செய்வது... அன்று அது தான் நடந்தது. அவள் பற்றி கவிதை வேண்டுமாம். அவள் வீட்டில் காண்பிப்பதற்காம். அதனால் அவள் பற்றிய வர்ணனையாக இருக்க கூடாதாம். ஆனால் அழகாக இருக்க வேண்டுமாம். பின்னாளில்  உதவும் என்று அவரையும் புகழ்ந்து வைத்தேன். ஹ்ம்ம்.... எப்போ டின்னு கிழியப் போகுதோ?  

ஈற்றடியில் குறள்
மூன்று அடியில் ஹைக்கூ 
நான்கு அடியில் வெண்பா 
நாலே முக்கால் அடியில் நீ!
கவிஞர் தான் உன் தந்தை! 

No comments:

Post a Comment