Thursday, April 29, 2010

சிறப்பு தரிசனம்


காத்திருப்போர் எட்ட நின்று பார்க்க

காசிருப்போர் கிட்ட நின்று பார்க்க

காட்சி அளித்தது கற்சிலை !


காத்திருப்போர் அன்றி

காசிருப்போருக்கு ஏனோ கரிசனம் ?

சிறப்பு தரிசனம்

Monday, April 26, 2010

வண்ணங்கள் இருக்கட்டும் இப்படி



உள்ளம்

அது வெளுப்பாக இருக்கட்டும்


நினைவுகள்

அவை பசுமையாக இருக்கட்டும்.


மஞ்சள்

அது மருந்தாகவே இருக்கட்டும்

வீணான விழாவில்

நீராடுவதற்கு அல்லாமல்.


நீலம்

அது சாந்தமாகவே இருக்கட்டும்

போதும் ஒரு டிசம்பர் - 26


டிசம்பர் - 6

அது வெளுக்காவிடினும்

கருப்பாகவே இருக்கட்டும்

மேலும் சிவக்காமல்.


காவி (சாமியார்)

அது ஒழிந்தே போகட்டும்.


பிடித்த வண்ணம்

அது எதுவாகவும் இருக்கட்டும்.


கொள்கை

அது மட்டும்

சிவப்பாகவே இருக்கட்டும்.





ம்ஹூம் !



கண்ணுக்கு தெரிந்த கொசு
கண்ணுக்கு தெரியாத சாதி

.............. கடவுள்

ம்ஹூம் !

தபால் பெட்டி


யார்

காதல் கடிதம் கொடுத்தாலும்

வங்கி கொள்கிறாள்

இந்த சிகப்பு சிறுக்கி

தபால் பெட்டி !

நிர்வாணம்

பட்ட பகலில்

சுடு மணலில்

நிர்வாணமாய்

கூலித் தொழிலாளியின்

பாதங்கள்

இரக்கமே இல்லையா ?

தினம் தினம்

சாலை ஓரமாய்

பிரசவிக்கப்படுகிறாள்

தபால் பெட்டி !

நவீனம்

தனியே புலம்பும் பித்தன்

காதோரம்

செல்போன் !

Sunday, April 25, 2010

திருவிழா தான்



திருவிழா தான்

எனக்கு

உன்னோடு வீதி உலா !

Saturday, April 24, 2010

குறும்பு

உச்சி வெயிலின் குறும்பு

சொட்டை தலையில்

ஒளிரும் பல்பு !

Friday, April 23, 2010

தீண்டலின் தீண்டாமை நன்று !

இனி ஒரு முறை

தீண்டாதே !

பிறப்பினால்

பெற்ற பட்டத்தினை

பெருமை என

பெயரோடு கொள்பவர்களை