Thursday, April 29, 2010
சிறப்பு தரிசனம்
காத்திருப்போர் எட்ட நின்று பார்க்க
காசிருப்போர் கிட்ட நின்று பார்க்க
காட்சி அளித்தது கற்சிலை !
காத்திருப்போர் அன்றி
காசிருப்போருக்கு ஏனோ கரிசனம் ?
சிறப்பு தரிசனம்
Monday, April 26, 2010
வண்ணங்கள் இருக்கட்டும் இப்படி
உள்ளம்
அது வெளுப்பாக இருக்கட்டும்
நினைவுகள்
அவை பசுமையாக இருக்கட்டும்.
மஞ்சள்
அது மருந்தாகவே இருக்கட்டும்
வீணான விழாவில்
நீராடுவதற்கு அல்லாமல்.
நீலம்
அது சாந்தமாகவே இருக்கட்டும்
போதும் ஒரு டிசம்பர் - 26
டிசம்பர் - 6
அது வெளுக்காவிடினும்
கருப்பாகவே இருக்கட்டும்
மேலும் சிவக்காமல்.
காவி (சாமியார்)
அது ஒழிந்தே போகட்டும்.
பிடித்த வண்ணம்
அது எதுவாகவும் இருக்கட்டும்.
கொள்கை
அது மட்டும்
சிவப்பாகவே இருக்கட்டும்.
நிர்வாணம்
பட்ட பகலில்
சுடு மணலில்
நிர்வாணமாய்
கூலித் தொழிலாளியின்
பாதங்கள்
சுடு மணலில்
நிர்வாணமாய்
கூலித் தொழிலாளியின்
பாதங்கள்
Subscribe to:
Posts (Atom)
